மே 1 இன்று - அரியலூர் மாவட்ட சமூக செயல்பாட்டாளர்கள் google meet இணையதள வழி சந்திப்பு.

  • Posted on May 04, 2020

மே 1  இன்று - அரியலூர் மாவட்ட சமூக செயல்பாட்டாளர்கள்  google meet
இணையதள வழி சந்திப்பு.

20 பேர் கலந்து கொண்டார்கள். நீர் நிலைகள் பாதுகாப்பு,அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்தல், கிராம வளர்ச்சி போன்ற பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்யக்கூடிய சமூக செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 
இதில்  கலந்துகொண்ட அனைவரும்  "எதிர்காலத்தில் இணைந்து சிறப்பாக செயல்பட முடியும்" என்ற நம்பிக்கையை அளித்ததாக கூறினர். இந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர்  திருப்பதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியை நல்லோர் வட்டத்தின் மாநில பொறுப்பாளர்கள் திரு அன்பு திருமதி தீபலட்சுமி ஆகியோர் வழிநடத்தினர்.

நாளை "மாவட்ட பொறுப்பாளர்கள்"28 பேர்       சந்திப்பு (google meet)நடைபெறும்.