ஏப் 30 - மாநில மகளிர் google meet.

  • Posted on May 04, 2020

சென்னை, செங்கை, விழுப்புரம், புதுச்சேரி கடலூர், நாகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ,அரந்தாங்கி , ஈரோடு ,கோவை , திருவண்ணாமலை, ராணிப்பேட்டை  ஆகிய 15 மாவட்டங்களிலி ருந்து 44 பேர் கலந்து கொண்டனர்.

நல்லோர்வட்டத்தின் 5 களங்களில் ஒன்றான "மகளிர் களம் "ஆண்களுக்கு இணையாக 
பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த கூகுல் சந்திப்பு 11 மணி முதல் 3 மணிநேரம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை
மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி தீபலட்சுமி மகளிர் சக்தி பொறுப்பாளர் டாக்டர் வினோதினி ஆகியோர் நடத்தினர்.

பலர் தமது கிராமங்களை முன்னேற்றவும்,
மகளிர்க்கு விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி சமூப்பணியில் ஈடுபடச்செய்யவும் உறுதியளித்தனர்.

ஏப் 29 - திருவண்ணாமலை மாவட்ட சமூக செயல்பாட்டாளர்கள் google meet சிறப்பாக நடைபெற்றது. 24 பேர் கலந்துகொண்டனர்.
தமிழக மாநில பொறுப்பாளர் திரு அன்பு நிகழ்வை வழிநடத்தினார்.

இன்று மே 1- அரியலூர் மாவட்ட சமூக செயல்பாட்டாளர்கள் சந்திப்பு. மாவட்ட பொறுப்பாளர் திருப்பதி இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். மகிழ்ச்சி.