தற்சார்பு வாழ்க்கை மட்டுமே தமிழகத்தை மட்டுமல்ல,இந்தியாவையே தலை நிமிர்த்தும். - நல்லோர் வட்டம்

  • Posted on May 09, 2020

தற்சார்பு வாழ்க்கை மட்டுமே தமிழகத்தை மட்டுமல்ல,இந்தியாவையே தலை நிமிர்த்தும்.
தலைசிறந்த தாக்கும் !
தற்சார்பு -அது ஒரு பண்பு, கலாச்சாரம்.
அதை நாம் இழந்துள்ளோம் !
மீண்டும் பெற !
1) அது பற்றிய விழிப்புணர்வு.
2)விழிப்புற்ற மக்களிடையே ஒருங்கிணைப்பு.
3) ஒருங்கிணைந்த மக்களின்
Organised People திட்டமிட்ட செயல்பாடு.

நல்லோர் வட்டம் இதை தெளிவாகவும்,உறுதியாகவும் அர்ப்பணிப்புடன் செய்துவருகிறது.
நாள்தோறும் தமிழகம் நெடுகிலும் மக்கள் "தாமாகவே ஏதாவதொரு துறையை விரும்பி ஏற்று " தம்மை நல்லோர் வட்டத்தில் இணைந்து வருகிறார்கள்.

இன்று ,இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ள வானகம் திரு ரமேஷ் அவர்கள் உட்பட 47 பேர் இணையவழி( google meet) காணொளி மூலம் 2 மணிநேரம் கலந்துரையாடி ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு திட்டமிடப்பட்டது.
இன்றைய சந்திப்பு அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கையளித்தது.