தர்மபுரி மாவட்ட நல்லோர் வட்டம் கட்செவி குழு" துவக்கப்பட்டுள்ளது

  • Posted on May 04, 2020

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த "தர்மபுரி மாவட்ட நல்லோர் வட்டம் கட்செவி குழு" துவக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இக்குழு நமது மாவட்டத்தில்"ஆங்காங்கே உள்ள அழகான மலர்களை பறித்து ஒரு மாலையாக" ஆக்குவது போல மாவட்டம் முழுவதும் உள்ள நல்லோர்களை( தன்னலம் அற்றவர்கள், சமூக அக்கறை உடையவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், திறன் வாய்ந்தவர்கள், சாதனையாளர்கள், உதாரண புருஷர்கள்) இவர்களைக் கண்டறிந்து மாவட்டத்தில்  மகத்தான மூன்றாவது சக்தியான மக்கள் சக்தியை உருவாக்கும்.
இது சம்பந்தமான" நமது நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்டுள்ள அனுபவங்கள் இவைகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஆதாரங்கள் "இவைகள் மட்டுமே இக்குழுவில் பகிர்ந்துகொண்டு குழுவின் நோக்கத்தை நிறைவேற்றுவோம்.

இப்படிப்பட்ட இந்த
 " ஒருங்கிணைந்த நல்லோர் சக்தி" நமது மாவட்டத்தை கலாம் ஐயாவின் இலக்கான "எல்லாத்துறைகளிலும் வளர்ந்த மாவட்டமாக "
உருவாக்கும்.
இக்குழுவில் இணைந்துள்ள மகத்தான மனிதர்கள் அனைவர்க்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.